உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/31

திரிசாவுக்கு நாற்பதாவது ..............

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரியவிஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக மங்காத்தாவில் நடித்து வருகிறார். இப்படம் அஜீத்திற்கு 50வது படம், அதுமட்டுமல்ல த்ரிஷாவிற்கு இது 40வது படமும் கூட.

குஷி, ஜோடி உள்ளிட்ட படங்களில் ஒரு சிறிய கேரக்டரில் தோன்றிய த்ரிஷா, மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 39படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. இப்போது இவரது நடிப்பில், அஜீத்துடன் ஜோடி போட்டிருக்கும் மங்காத்தா படம் த்ரிஷாவுக்கு 40வது படம். இதனால் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது, சினிமாவில் நான் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 39படங்களில் நடித்துவிட்டேன். தற்போது அஜீத்துடன், நான் நடிக்கும் மங்காத்தா படம், 40வது படம். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. மங்காத்தா படம் ரிலீசாகும் வரை படத்தை பற்றியோ, கதையை பற்றியோ எதுவும் கூற கூடாது என்று டைரக்டர் கட்டளையிட்டுள்ளார். ஆகையால் மங்காத்தா படத்தை பற்றி இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்யாசமானது. அதை படம் ரிலீசாகும்போது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன், இன்னும் நிறைய சாதிப்பேன் என்றார்.

ஹோட்டலில் நிர்வாண குளியல்,நள்ளிரவு பார்ட்டி, தோழிகளுடன் கூத்து, கும்மாளம் என்று த்ரிஷா, ஒருபுறம் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிவந்தாலும், மற்றொருபுறம், டாப்சி, ஹன்சிகா மோத்வானி, தீக்ஷா செத், ரிச்சா போன்ற புது நடிகைகளின் தொடர் படையெடுப்புக்கு மத்தியிலும், நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.