உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/22

நல்ல மனமே சிறந்த வழிகாட்டி


* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.
அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.

* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால்,
மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்
அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.

* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும்,
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.

* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.
பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.

* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.
அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது.
தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.

-புத்தர்

3 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.