உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/05

அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : த்ரிஷா


கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் நான் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். நட்சத்திர ஹேட்டலில் நிர்வாண குளியல் சர்ச்சையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்த நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது வரை எக்கச்சக்க சர்ச்சைகளில் சி்க்கியவர் நடிகை த்ரிஷா. எந்தவொரு சர்ச்சையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத த்ரிஷா, அவ்வப்‌போது அதிரடி பேட்டியளித்து தடாலடி கருத்துக்களையும் சொல்லி வருகிறார்.
இப்போது ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,  ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது. எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும். படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்று கூறியுள்ளார். 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.