உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/04

விண்டோஸ் -8 அறிமுகம்.

உலகின் மிகப் பிரபல்யமான மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒபரேடிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கின்றது.
அந்த வகையில் தற்போது பாவனையில் உள்ள விண்டோஸ் 7 ஒபரேடிங் சிஸ்டத்திற்கு பதிலாக, விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாககக் குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் கலிபோர்னியாவில் விண்டோஸ் 8 தொடர்பான முதலாவது நேரடி செய்முறை வழிகாட்டி விண்டோஸின் தலைவர் ஸ்டீவன் சினோப்ஸ்கீயின் செய்து காண்பிக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டத்தில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்க்டொப் கணனிகளைப் போன்றே டச் ஸ்ரீன் தொழில்நுட்பத்திலும் இயங்கக் கூடிய வகையில் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 தொலைபேசியின் அமைப்பிற்கு நிகரான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விண்டோஸ் 7 தொலைபேசியில் காணப்படும் அப்லிகேசன்களைப் போன்று இந்த ஒபரேடிங் சிஸ்டம் பாவனையாளர்களுக்கு மிகவும் எளிமையான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
பல அப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி ஜூலி லார்சன் தெரிவித்துள்ளார்.
ஒபரேடிங் சிஸ்டத்தின் வெளித்தோற்றத்தில் பாரிய மாற்றங்கள் காணப்பட்ட போதிலும் உள்ளார்ந்த தொழில்நுட்பங்களில் பாரிய மாற்றம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்போது புதிய ஒபரேடிங் சிஸ்டம் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், 2012ம் ஆண்டு வரையில் இந்த ஒபரேடிங் சிஸ்டம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.