உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/03

விஜய் அதிர்ச்சி; வேலாயுதம் கதை வெளியானது.

விஜய் - ஜெயம் ராஜா இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆரம்பிக்கும்போதே இக்கதையின் கரு தெலுங்கு படமான 'ஆசாத்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா' படத்தின் இயக்குனரான திருப்பதிசாமி தெலுங்கில் எழுதி இயக்கிய படம் 'ஆசாத்'. இந்நிலையில் ஆசாத் படத்தின் கதை கரு தான் வேலாயுதம் என்றால் அப்படத்தின் கதை என்ன?
'வேலாயுதம்' படத்தின் கதை :

பேனா முனையால் எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை கொண்ட பெண் பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் பால் வியாபாரம் செய்யும் இளைஞர் விஜய். கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் அமைதியாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் நெருங்கி வர, கஷ்டப்பட்டு சிட்பண்டில் சேர்த்த சேமிப்பை எடுத்துச் செல்ல நகரத்துக்கு வருகிறார்.

விஜய் வந்த நேரத்தில் நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை. இந்நேரத்தில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, குண்டு வைத்த சதிகாரனைக் தண்டிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் அடித்து பரப்பி, டிவி செய்திகள் மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்.

பால்கார விஜய் நகரத்தில் பிரபலமான கோயிலில் வந்து அர்ச்சனை செய்கிறார். அப்போது பெயர் சொல்லுங்கள் என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று கூறுகிறார் விஜய். அய்யர் உட்பட வழிபாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான வேலாயுதம் இவன் தான் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.

செய்தி பரவுகிறது. சதிகாரன் வைத்த வெடிகுண்டு வெடிக்காமல் போகும் போதெல்லாம் அங்கே தற்செயலாக வேலாயுதம் நிற்கிறார். வேலாயுதம் பெயரும், முகமும் ஒரே இரவில் பிரபலம் ஆகிவிடுகிறது.

நாம் உருவாக்கிய கற்பனை பாத்திரம் நிஜமாகவே வந்துவிட்டதோ என்று குழம்பி அவஸ்தைப்படுகிறார் ஜெனிலியா. விஜய்யை நேரில் சந்தித்து பேட்டி கேட்க விஜய்யோ 'உன்னால் தான் எல்லாம் என்னை ஆள விடு' என்று நழுவுகிறார். ஜெனிலியாவிடமிருந்து தப்பித்து ஊருக்குச் செல்லத் தயாராகும் விஜய், அதற்குமுன் தங்கையின் கல்யாண செலவுக்கு பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்ற, சிட்பண்டை துவம்சம் செய்கிறார் விஜய். இதனால் சதிகார வில்லன், பால்கார விஜய்யை பழிவாங்க துடிக்கிறார்.

இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமண ஏற்பாடுகள் களை கட்டுகிறது. தக்க தருணம் பார்த்து வேலாயுதத்தை பழிவாங்கத் துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் குண்டு வைத்து விட, அந்தத் தாக்குதலில் விஜயின் தங்கை இறந்துவிட, பால்கார விஜய், மக்கள் நம்பும் சூப்பர்பவர் வேலாயுதமாக மாறுகிறார்.

கதைப்படி ஜெனிலியா தான் முக்கியமான நாயகி. ஹன்சிகா கிராமத்தில் பால்கார விஜய்யை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.