உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/04

மாவீரன்» திரை விமர்சனம்.

தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான மகதீரா தான் தமிழில் மாவீரனாகியிருக்கிறது.

400 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள உதயகிரி நாட்டின் ராஜா சரத்பாபு. அவரது படைத் தளபதி ராம் சரண். தளபதிக்கும் சரத்பாபு மகள் இளவரசி காஜல் அகர்வாலுக்கும் காதல். ஆண் வாரிசு இல்லாத உதயகிரியை கைப்பற்றத் துடிக்கிறான் காஜலின் மாமன் தேவ்கில். இதனால் காஜலை மணக்க திட்டமிடுகிறான். அந்த திட்டத்தை ராம்சரண் முறியடிக்கிறார். ராம்சரண் வம்சத்தில் யாரும் 30 வயதை தாண்டுவதில்லை என்பதால் தன் மகள் ராம்சரணை மணந்து விதவையாவதை விரும்பாத ராஜா, காதலை தனக்கு தானமாக தந்துவிடுமாறு கேட்கிறார். நாட்டுக்காக காதலை தியாகம் செய்கிறார் ராம்சரண்.

இதற்கிடையில் காஜல் கிடைக்காத ஆத்திரத்தில், உதயகிரியை கைப்பற்ற வரும் முகலாய மன்னன் ஷேர் கானுக்கு(ஸ்ரீஹரி) நாட்டை காட்டிக் கொடுக்கிறான் தேவ்கில். இந்த போரில் காஜலை தேவ்கில் கத்தியால் குத்துகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும் காஜல், "நாட்டுக்காக என் காதலை மறுத்தாய், மரணத்தின் தருவாயில் அந்த காதலை தா" என்று கேட்கிறார் ராம்சரணிடம். அதை கொடுக்கும் முன்பு, மலையிலிருந்து உருண்டு விழுகிறார். கூடவே விழுந்து உயிர் துறக்கிறார் ராம்சரண். இது 400 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது ராம்சரண் பைக் ரேஸ் வீரராகவும், காஜல் அவரை காதலிப்பதற்கென்றே பிறக்கிறார்கள். அதே வில்லன் தேவ்கில்லும் பிறக்கிறார். மீண்டும் அதே மாதிரியான யுத்தம் தொடங்குகிறது. இந்த முறை காதலர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது திரைக்கதை.

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அறிமுகமாகும் பைக் ரேஸ் காட்சியும், அடுத்து வரும் குத்துப்பாட்டும் தெலுங்கு வாடை அடித்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அந்த எண்ணத்தை அப்படியே மாற்றி விடுகின்றன. காஜல் அகர்வால்தான் தான் தேடி அலையும் பெண் என்பது தெரியாமல் அவரிடமே தன் காதலியைப் பற்றி கேட்பதில் ஆரம்பித்து.. பேருந்தில் காஜல் போகும்போது தன் காதலை சொல்லும் காட்சிகள் எல்லாம் செம கலாட்டா.....

இடைவேளைக்கு அப்புறம் முந்தைய ஜென்மத்திற்கு நகர்கிறது கதை. படைத்தளபதியாக வரும் ராம்சரண் குதிரையில் பாய்ந்து வந்து அறிமுகம் ஆகும் காட்சியிலேயே நம்முள் கலந்து போகிறார். நடிப்பு நடனம் எல்லாவற்றிலுமே நன்றாக அவரது தந்தையை நினைவுபடுத்துகிறார்.

காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங்க் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துகொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். மனதை கொள்ளையடித்துப் பறக்கச் செய்கிறாள் இந்த மின்மினிப் பூச்சி.

'வேட்டைக்காரனில்' போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, 'சுறா'வில் வில்லனாக நடித்த தேவ்கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.

முமைத் கானும், கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் 'கௌரவத்தோற்றம்' அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் க்ளைமாக்ஸூக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.

கிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா...? இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் பொத்தல்கள் இருந்தாலும் இந்த காட்சி நிச்சயம் மெய்மறக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைக்கும்.

டப்பிங் படத்திற்கு முதன் முதலாக கே. பாக்யராஜ் வசனம் எழுதிய படம் என்ற பெருமையை இப்படம் தட்டிச் செல்கிறது. படம் துவங்கிய சற்று நேரத்திலேயே 'உங்கப்பன் சாந்தி முகூர்த்தம் ஆரம்பிச்ச நேரம் அப்படி..' என்று பின்புலத்தில் ஒலிக்கும் வசனம் ஒன்று போதும்.. இது பாக்யராஜ் வசனம் என்று சொல்வதற்கு. இரட்டை அர்த்த வசனத்திற்கோ.. ஆபாசமான வார்த்தைகளுக்கோ இப்படத்தில் வேலை இல்லை.

மரகதமணியின் இசை படு மிரட்டல். பாடல்களில் 'ஆசை ஆசை தான்..' பாடல் இசையிலும் பாடல் காட்சி அமைப்பிலும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது. கி.பி. 1600க்கு கதை நகரும் போது அட்டகாசமான அந்த செட்களை போட்டு அசத்திய கலை இயக்குநர் ரவீந்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்கு உழைத்திருக்கிறார். அந்தகாலத்து நகரங்களை துளி அழகு குறையாமல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கு பெரிதாக ஒரு சபாஷ் போடலாம்.

ஆங்காங்கே தெலுங்கு வாடை அடித்தாலும், லாஜிக் என்கிற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு, பார்த்தால் இரண்டரை மணி நேரம் இரண்டரை நிமிடமாக ஓடுகிறது. ஜென்மம் தாண்டிய காதல் கதை தமிழுக்கு புதிதில்லை என்றாலும், பிரம்மாண்டமும், கிராபிக்ஸ் யுக்தியுமாக மிரட்டியிருப்பதால் ரசிக்கலாம்!

மாவீரன் - காதல் காவியம்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.