உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/15

நடிகை அசின் விளம்பரத்துக்காக அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதை நிறுத்த வேண்டும்

நடிகை அசின் மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த போது இந்தி பட உலகுக்கு தாவினார்.அங்கு சல்மான்கான் ஜோடியாக நடித்த "கஜினி" படம் வெற்றி பெற்றதால் "லண்டன் டிரீம்ஸ்", "ரெடி" படங்கள் வந்தன. தற்போது "ஹவுஸ் புல் 2" என்ற ஒரே படம் மட்டும் கைவசம் உள்ளது.

இதற்கிடையில் ஷாருக்கானுடன் அசின் ஜோடி சேரப்போவதாகவும் மேலும் இரு படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் பரவின. நடிகர் நீல்நிதிஸ் முகேஷ் இயக்குனர் ஹரிடே ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாகவும் தனக்கு ஜோடியாக அசினை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குனரை அவர் வற்புறுத்துவதாகவும், இன்னொரு தகவலும் வெளியானது.

அசினே இது போன்ற வதந்திகளை பரப்பி விளம்பரம் தேடுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது. மார்க்கெட் பிடிப்பதற்காக அசின் உதவியாளர்கள் இச்செய்திகளை பரப்புவதாக மும்பை பட உலகினர் கூறுகின்றனர். இயக்குனர் ஹரிடே ஷெட்டி அளித்த பேட்டியில், நடிகை அசின் விளம்பரத்துக்காக அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, நீல் நிதின் முகேஷை எனது படத்துக்கு நான் ஒப்பந்தம் செய்யவில்லை. நிலைமை இப்படி இருக்க அவர் எப்படி அசினை ஜோடியாக்கும்படி என்னை வற்புறுத்தி இருப்பார்? நான் இதுவரை அசினை சந்தித்ததே இல்லை. நீல்நிதின் முகேஷை எனது படத்தில் நடிக்க அணுகவில்லை. ஒரு வருடமாக நசுருதீன்ஷா பட வேலைகளில் மூழ்கியுள்ளேன். மும்பை பட உலகிலேயே திறமையான நடிகைகள் உள்ளனர். தென்னிந்திய நடிகையை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.