உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/19

'மாற்றான்' படத்திற்கு சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் பதினாறு கோடியாம்.

சூர்யா ரசிகர்களை மேலும் சந்தோசப்படுத்துவது போல ஒரு செய்தி, அவை விஜய்யை முந்திவிட்டார் சூர்யா.


இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை பரவ விட்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் மீடியேட்டர்களும்.

இதை நிரூபிக்கும் விதத்தில் அவர்கள் தரும் விளக்கங்கள் எதையும் அலட்சியமாக கருத முடியாது. 'மாற்றான்' படத்திற்கு சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் பதினாறு கோடியாம்.

அதுவே 'வேலாயுதம்' படத்திற்கு விஜய் வாங்கியிருக்கும் சம்பளம் பதிமூணு கோடியாம். ஒரு நடிகருக்கு அவரது பிசினசை வைத்துதான் சம்பளத்தை ஏற்றுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படியென்றால் சூர்யாவின் சம்பளம் ஏறியதற்கும் இதுதான் காரணமா என்றால் அழுத்தம் திருத்தமாக ஒரு ஆமாம் வருகிறது அவர்களிடமிருந்து.

'மாற்றான்' படம் இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் இப்படத்தின் வியாபார எல்லைகள் விரிய ஆரம்பித்திருக்கிறதாம். விலையும் உச்சத்தில் நிற்கிறதாம். கிட்டத்தட்ட 63 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசுகிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

இதில் கணிசமான கோடிகளை குறைத்துதான் வியாபாரம் ஆகியிருக்கிறதாம் விஜய்யின் தற்போதைய படம் ஒன்று. இப்போது சொல்லுங்க யார் உசத்தி என்கிறார்கள் மேற்படி மீடியேட்டர்கள்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.