உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/20

வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: ஹாரிஸ் ஜெயராஜ்

நான் இசையமைக்கும் படத்தில் உள்ள பாடல்கள் வெற்றி பெற்றாலும் சரி அல்லது தோல்வியடைந்தாலும் சரி அதை என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.


மின்னலே படத்தில் தொடங்கி எங்கேயும் காதல் படம் வரை பெரும்பாலான படங்கள் அனைத்திற்கும் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு சமீபத்தில் வந்த "கோ" படத்தின் இசை சரியாக போகவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பொதுவாக நான் ஒரு படத்திற்கு இசையமைத்து முடித்த பின்னர் அது வெற்றி பெற்றாலும் சரி அல்லது தோல்வியடைந்தாலும் சரி அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

சொல்லப்போனால் பாடலோ அல்லது படம் வந்த பிறகு எப்படி இருக்கிறது என்று என்னுடைய உதவியாளர்கள் தான் வந்து கூறுவர். ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் போது ஒருவிதமான புது அனுபவத்தை உணர்கிறேன்.

படத்திற்கு படம் புது இசையை மட்டுமே கொடுக்க நினைக்கிறேன். தற்போது நண்பன் படத்தின் இசையமைப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அனைத்து பாடல்களும் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும். அதேபோல் இந்தியில் எடுக்க போகும் காக்க காக்க படத்திற்கும் புதுசா தான் மெட்டு அமைக்கிறேன்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.