உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/11

சினேகா பிரசன்னா காதலா? கண்ணாடிகளை ஏற்றிவிட்டபடி கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தார்களாம்.

சும்மா பழகுனா கூட அதை காதல்னு எழுதி கொச்சை படுத்துறாங்கப்பா. தனக்கும் பிரசன்னாவுக்குமான நட்பு பற்றி வருகிற செய்திகளுக்கு இப்படிதான் 'குண்டூர் மொளகா' எபெக்டில் பதில் சொல்லி வந்தார் சினேகா. இவரும் பிரசன்னாவும் அமெரிக்காவில் தயாரான 'அச்சமுண்டு அச்சமுண்டு' பட ஷூட்டிங் சமயத்தில் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிக யதார்த்தமாக அப்படத்தில் நடித்திருந்ததுதான் 'ரெண்டு பேருக்கும் நடுவில் அது இருக்கலாமோ' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதிலளித்த சினேகா, அப்படியெல்லாம் இல்லை. இதுக்காக நான் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணவா முடியும்? என்றெல்லாம் கொதித்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்தார்களாம் இருவரும். ரிஜிஸ்டிரேஷன் எண் 2 என்ற நம்பர் பிளேட் பொறுத்திய காரில் கண்ணாடிகளை ஏற்றிவிட்டபடி கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தார்களாம். வெளியே வந்து பீச் மணலில் நடக்க முடியாதபடி செய்தது பாழாய் போன அந்த செலிபிரிட்டி அந்தஸ்துதான். காருக்குள் இருந்தாலும் கடந்து போன ஒரு சிலர் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டதுதான் பிரச்சினையே! ஹோய்... சினேகாடா என்று அவர்கள் ஆச்சர்யப்பட, அங்கிருந்து காரை கிளப்பிக் கொண்டு கிளம்பிவிட்டதாம் ஜோடி. நண்பர்களாக இருந்தால் கூட பீச்சுக்கு ஜோடியாக போகலாம். அதை எப்படி காதல்னு சொல்லுவீங்க? இதுதான் நமது கேள்வியும்! அட விடுங்கப்பா.... காத்து வாங்க வந்திருப்பாங்க.....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.