உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/24

வாஸ்து சாஸ்திரப்படி மாறும் ரஜினி வீடு!

ரஜினிகாந்தின் உடல்நலக் குறைவுக்கு அவருடைய வயது உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், அவருடைய குடும்பத்தினரை பொறுத்தவரையில் அவர் இருக்கும் சென்னை, போயஸ் கார்டன் வீடும் ஒரு காரணமாம். அதனால்தான் அந்த வீட்டை தற்போது வாஸ்து சாஸ்திரப்படி மாற்றம் செய்யப்போகிறார்கள். சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் ரஜினிகாந்த், இன்னும் சில வாரங்களில் சென்னைக்கு திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து ரஜினி சென்னைக்கு வரும்போது இந்த வீட்டில் புதுமனை புகுவிழா நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து தலைவர் வீட்டு தரப்பிலிருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மருத்துவமனை, சிகிச்சை என அவர் பெரும் சோதனைக்கு உள்ளானார். அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த வாரம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இப்போது அவர், டாக்டர்கள் அறிவுரையின்படி, குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். டாக்டர்கள் தினமும் அங்கு சென்று அவரது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்கள். ரஜினி இன்னும் சில வாரங்கள் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலனை கருதி, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரையின்படி பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தால்கூட, ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி தவிர, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திடம் பேசியுள்ளார் ரஜினி. சமீபத்தில் அவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கன்னட நடிகர் அம்பரீஷும் சந்தித்தாக செய்திகள் வந்தன. ஆனால் இதை அவரது வீட்டினர் உறுதி செய்யவில்லை. இதற்கிடையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு, வாஸ்துப்படி மாற்றியமைக்கிறார்களாம். ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும்போது, போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் 'புதுமனை புகுவிழா' நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள். ரஜினியின் வீட்டுக்குப் பெயர் பிருந்தாவனம். அதன் முகப்பில் வாய்மையே வெல்லும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை 2001-ம் ஆண்டு ரஜினி புதுப்பித்துக் கட்டினார். எல்லாத்துலயும் மாற்றத்த விரும்புறவரு.. புது சூழலை விரும்புறதுலயும் தப்பில்லயே......

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.