உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/28

எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!

பார்க்க ரொம்ப 'ரிசர்வ்டு டைப்' மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களிடம் இயக்குநர் செல்வராகவன் அடிக்கும் கமெண்டுகள் செம கலாட்டா ரகம். செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜூலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜூலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. திரையுலக பிரபலங்கள் புடைசூழ சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு நிருபர்களை சந்தித்தார் செல்வா. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாத என்னை இந்தளவுக்கு பாராட்டி வளர்த்ததும் நீங்கதான். விமர்சித்ததும் நீங்கதான். திட்டியதும் நீங்கதான். நான் இந்த நிலைமைக்கு இங்கு நிற்பதற்கும் நீங்கதான் காரணம். ஒரு பெற்றோர் ஸ்தானத்தில்தான் உங்களை வைத்து பார்க்கிறேன். தனித்தனியாக உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு நினைத்தாலும் சவுகர்யம் கருதி ஒரே நேரத்தில் கொடுக்கிறேன். அவசியம் வந்திருங்க என்றார். அதற்கு மேல் மைக் முன்பு நின்றால் பல கேள்விகள் 'விஸ்வரூபம்' எடுக்கும் என்று நினைத்திருக்கலாம். நன்றி என்று கூறிவிட்டு சட்டென்று மேடையை விட்டு இறங்கினார். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா. ஆரம்பத்தில், "எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்", என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா. "கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. 'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை. என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும். கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான். தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!! என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!," என்றார். இந்த இரண்டாம் உலகத்துலயாச்சும் சந்தோஷமா வாழுங்க!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.