உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/06

இயக்குநர்கள் சங்க தேர்தலில் பாரதிராஜாவை எதிர்த்து அமீர் போட்டி

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த முறை தலைவராக பாரதிராஜா இருந்து வந்தார். வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு எழில் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுகிறார். இவருடைய அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார். இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.சபாசு.......! சரியான போட்டிதான்!!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.