உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/04

நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள்.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான 'தங்கவேட்டை' நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை. ஏன் லேட்டா வர்றீங்க..? என்று கேட்டால்கூட கையைப் பிடித்து இழுத்தார் என்று ராடன் ஆபீஸூக்கு புகாரை அனுப்பி வைப்பார். இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர். அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோது தான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராதிகா முன்பு வைக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அப்போது தான் விஜயலட்சுமி சொன்ன ஐ லவ் யூ கதைகள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்தது.

தங்கவேட்டை நிகழ்ச்சி இயக்குநர் ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய் புகார் போலீஸில் கொடுத்தார். அதனால் தான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ் சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள். கடந்த 2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். இதனையடுத்து தான் விஜயலட்சுமி 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ என்ட்ரீயானார். அதில் இருந்து பல அரசியல் தலைவர்கள் தொடர்பு கிடைத்தது. இதனால் தான் விஜயலட்சுமி அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர். இந்த விவகாரத்திற்கு பின்னணியில் சில முக்கிய திரைப்பட-அரசியல் புள்ளிகள் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் மீடியாக்களுக்கு பெரும் குழம்பமாக இருந்தாலும். முடிவு தெரியும் வரை நல்ல தீனியாவே அமையும். புலிவால புடிச்சிருக்கீங்க....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.