உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/02

ரஜினி புலம்புகிறாரா?


ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று அத்தனை உள்ளங்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சென்னை மருத்துவமனையில் அவர் இருந்தபோது பேசிய சில விஷயங்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் அது என்று கிசுகிசுக்கிறார்கள் மருத்துமனை வட்டாரத்திலிருந்து. நினைவு திரும்பிய சில சந்தர்ப்பங்களில், சத்தியநாராயணாவை கூப்பிடு. நான் அவனுக்கு ஒண்ணுமே செய்யல. அவனுக்கு ஏதாவது நான் செய்யணும் என்று கூறினாராம் ரஜினி. ஒருமுறையல்ல, பல முறை இதே வார்த்தைகளை அவர் கூறியதாக கிசுகிசுக்கிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக ஆரம்ப காலம் தொட்டு இருந்தவர் சத்யநாராயணாதான். பின்பு என்ன காரணத்தாலோ அங்கிருந்து வெளியேறினார். ரஜினி மருத்துவமனையில் இருந்த போதுகூட இவர் அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை. இதற்கிடையில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் இந்த முறை மருத்துவமனைக்கு வந்து ரஜினி குடும்பத்தினருடன் சேர்ந்து அவரை கவனித்துக் கொண்டார். இடையிடையே ரஜினி, நான் ராஜ்பகதூருக்கு ஒண்ணும் செய்யலையே என்று புலம்புவதை கேட்க முடிந்தது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.

1 கருத்து:

  1. கலைஞருக்கு மட்டும் ரெம்பவே செய்துட்டாரு. அந்த பீதியிலதான் பேதியாகி படுத்துட்டாரு போல.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.