உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/06

சேரனுக்கு தர்மசங்கடம்.

இப்படி ஒரு சிக்கல் வரும் என்று சேரன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். சினிமாவை நேசிப்பவர்களுக்கு வருகிற இயல்பான கஷ்டம்தான் அது என்றாலும், சில வம்புகள் தானாக அமைகிறதே என்பதும் இன்னொரு வருத்தம்.

இவர் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் முரண் என்ற படத்தை முடித்து தயாராக வைத்திருக்கிறார். தனது சொத்து பத்துகள் அத்தனையும் அடகு வைத்துதான் இந்த படத்தை எடுத்திருக்கிறாராம். இதை உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளியிட நினைத்திருந்தார். இந்த நேரத்தில்தான் ஆட்சி மாற்றமும் வந்துவிட்டது.

திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் நாளுக்கும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் திமுக தலைவர் கருணாநிதியை போய் பார்த்து ஆசி வாங்கிவிட்டு வந்தார்.

இந்த படங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இவர் போகாமலிருந்தாலாவது இப்போது தர்மசங்கடம் தேவையிருந்திருக்காது.

ஆனால் போய் சிக்கிக் கொண்டாரே என்று கவலைப்படுகிறது சினிமா ஏரியா. தனது தவறை சரி செய்யும் விதத்தில் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தித்திருக்கிறார் சேரன். இதுவாவது கை கொடுக்கிறதா பார்க்கலாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.