உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/19

முகமூடியில் சூப்பர் ஹீரோவாக ஜீவா?

'கோ' படத்தின் வெற்றி நாயகனான ஜீவா தற்போது 'ரௌத்திரம்', 'வந்தான் வென்றான்', 'நண்பன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'ரௌத்திரம்' பட வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. 'வந்தான் வென்றான்' செப்டம்பரில் வெளிவர இருக்கிறது. ஷங்கரின் இயக்கத்தில் 'நண்பன்' படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜீவா. மிஷ்கின் இப்புதிய படத்திற்கு 'முகமூடி' என பெயரிட்டிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் சூர்யா, அடுத்து ஆர்யா, அடுத்து விஷாலை கேட்டிருக்கிறார். சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போய் விட்டதாம். இதையடுத்து மிஷ்கின் இப்படத்தினை கதையை ஜீவாவிடம் சொன்னதற்கு, படத்தில் நடிக்க உடனே ஒத்துக் கொண்டாராம். இப்படத்தில் இவர் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக ஹாங்காங்கிலிருந்து சண்டைப் பயிற்சியாளரை அழைத்து வர இருக்கிறார்கள். ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம். பிற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.