உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/08

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் இந்துவின் மைந்தன்!

யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன், The Real Time Location System என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஈழத்தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சாதனைக்காக UK ICT Pioneers விருது, Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurship ஆகிய இரு உயரிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான radio real time tagging system, பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர் லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

இவரது கண்டுபிடிப்பான intelligent wirless passive sensor technology system விமான நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.

சிதம்பரநாதன் சபேசன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அத்துடன் இவர் தற்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கட் கழக தலைவராகவும், கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில்நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.