உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/10

படம் பார்த்தால் ஐஸ்கிரீம் இலவசம் :

முன்பெல்லாம் தியேட்டர்களில் படங்கள் ரிலீசானால் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் செல்வார்கள். இப்போது நிலமை மாறிவிட்டது.

டிக்கெட் கவுண்டர்களை தியேட்டர் ஊழியர்கள் திறந்து வைத்துக்கொண்டு ரசிகர்களுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அப்படி இருந்தும் ரசிகர்கள் வருகை இல்லாததால் திருச்சியில் சில தியேட்டர்களில் நள்ளிரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சம்பவமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பகல் காட்சிகளிலும் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அதுவும் பலகோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான படங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்கும்?.

அந்த நிலமை சமீபத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார், சீரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்து வெளியான மாவீரன் படத்துக்கு ஏற்பட்டது. கடந்த மாதம் 23-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் 3 தியேட்டர்களில் மாவீரன் படம் ரிலீசானது.

ஆந்திராவில் வசூலில் சக்கை போடு போட்ட மகரதீராவை தான் மாவீரனாக மாற்றி வெளியிட்டு உள்ளார்கள். ஆந்திராவில் வெற்றி பெற்ற படம், மேலும் சிரஞ்சீவி மகன் நடித்த படம் என்பதால் திருச்சியிலும் வசூல் அள்ளும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் மாவீரனை பார்க்க ரசிகர்கள் ஏனோ தயக்கம் காட்டினர். ரசிகர்கள் இல்லாமல் தியேட்டர் காற்றாடியது. பணம் வசூலாகாததால் தியேட்டர் உரிமையாளர்கள் கவலையடைந்தனர்.

எனவே எப்படியாவது ரசிகர்களை இழுக்க யோசித்தனர். முடிவில் லால்குடி அன்பு சினிமா தியேட்டர்காரர்கள் மாவீரன் படம் பார்க்க வந்தால் ரசிகர்களுக்கு ஐஸ்கிரீம் இலவசம் என பட விளம்பர போஸ்டருடன் விளம்பரம் வெளியிட்டனர்.

ஐஸ்கிரீம் இல்லாவிட்டால் பாப்கார்ன் இலவசம் என அறிவித்து உள்ளனர். தியேட்டர்காரர்கள் வைத்த இந்த ஐஸ் ஐடியா நன்றாக வேலை செய்கிறது. இப்போது தியேட்டரில் ஐஸ்கிரீம் வழியும் கையோடு திரையில் ரவுசரண்தேஜா, காஜல் அகர்வால் காதலை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.