உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/14

புடவையில்கூட ஒரு பெண் கிளாமராக தெரிவார் -அத்வைதா.

'அழகர்சாமியின் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் அழகு குயில் அத்வைதா. பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாகவே மாறி விட்ட அத்வைதா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் 'சகாக்கள்'. 'அழகர் சாமி'யின் குதிரை முதலில் வந்து அறிமுகப்படமாகி விட்டது. கீர்த்தி ரெட்டி என்ற நிஜப்பெயரை சினிமாவுக்காக அத்வைதா என்று அல்ட்ரா மாடர்னாக மாற்றியிருக்கும் அவர், சினிமாவுக்கு முன்பு நிறைய மேடை நாடகங்களில் நடித்திருக்கிறாராம். கேரள மோகினி ஆட்டத்தை முறைப்படி கற்றிருக்கும் அவர் 16 ஆண்டுகளாக நடனம் கற்று வருகிறாராம். 'அழகர் சாமியின் குதிரை' படத்தில் தனது நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கும் அத்வைதாவிடம் கிளாமராக நடிப்பீர்களா? என்று கேட்டால் கவர்ச்சி பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறார். என்னை பொறுத்தவரை கிளாமரில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று முகம் சுளிக்க வைக்கிற மாதிரியான கிளாமர், இன்னொன்று டீசன்டான கிளாமர். பாவாடை, தாவணியில், ஏன் புடவையில்கூட ஒரு பெண் கிளாமராக தெரிவார். அது டீசன்டான கிளாமர். அதுபோன்று நடிக்க ஆசைப்படுகிறேன். என்று கூறுகிறார் அத்வைதா. இந்த டீசன்ட் எத்தன நாள் நீடிக்குதோ...? அந்த அழகர்சாமிக்கே வெளிச்சம்!

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.