உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/01/25

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பெருமையை நினைத்தபோது...யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம்! எதற்கெடுத்தாலும் கலாசாரம், பண்பாடு, அவற்றின் பிறழ்வு என்று குறைபாட்டுப் புராணம் பாடுவது மட்டும்தான் நமக்கு வழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களின் பெருமைகளை அறியாதவர்களாக நாம் இருக்கவில்லை என்பதற்காக இக்கடிதம் அவசரமாக எழுதப்படுகிறது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கும் சென்றார்.

அங்கு கைலாசபதி அரங்கில் அவர் உரையாற்றினார். அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை, அவர் எமது பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை, இது பற்றி எல்லாம் நாம் அடைந்த மகிழ்ச்சியை விட, டாக்டர் அப்துல் கலாமின் உரையைக் கேட்பதற்காக-கலாமை ஒரு தடவை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் இடிபட்டதைப் பார்த்து எம் கன்னத்தின் ஓரங்கள் நனைந்து விட்டன. அது ஆனந்தத்தின் அடையாளம்.

எங்கள் பிள்ளைகள் அறிவியலுக்காக ஏங்குகின்றவர்கள். அவர்களுக்கு சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாக அமையவில்லையே தவிர, அவர்களிடம் அறிவியலுக்கான தேடல் தாராளமாக உண்டென்பதை உணர்ந்து கொண்டோம். உலகில் கொலை வெறிப்பாட்டிற்காக திரண்டு கொள்ளும் இளைஞர் சமூகம், பொப் இசைப் பாடலில் பிரியப்பட்டு அலையும் கூட்டம், நடிகைகளுக்கு கோயில் கட்டி அபிஷேகம் செய்யும் ரசிகர் மன்றம், பிரபல்யமான நடிகர்களிடம் கையயழுத்துப் பெறுவதற்காக இடிபடும் இளவல்களின் பேரணி இப்படியாக உலகம் அசைகையில், எங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண வர்கள் ஓர் அறிஞரின் உரையைக் கேட்பதற்காக இடிபட்டு நெருக்குப்பட்டார்கள் என்றால், அது உலகில் எங்கும் நடக்காத சிறப்பு என்பதை மார்தட்டிக் கூறமுடியும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் வருகை தந்தார் என்ற வரலாற்றுப் பெருமையிலும் மிஞ்சுவதாக, அவரின் உரையைக் கேட்பதற்காக எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் முண்டியடித்தார்கள் என்ற பெருமை இருக்கும் என்று அடித்துக் கூற முடியும். அன்புக்கினிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியாளர்களே! மாணவர்களே! டாக்டர் அப்துல் கலாமின் உரை எங்கள் மாணவர்கள் கேட்பதற்கு முடியாமல் போனதன் காரணம் என்ன? கைலாசபதி கலையரங்கின் உள்ளடக்கம் போதுமானதல்ல என்பதுதானே. இந்தக் குறைக்கு முடிபு கட்ட வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு என மிகப் பிரமாண்டமான மண்டபம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக அனைவரும் சேர்ந்து ஒரு பெரும் நிதியைத் திரட்டுங்கள். கோபுரம் கட்டுவதற்கு கோடி கொடுக்கும் தனவந்தர்களுக்கும் வாரி இறைக்கும் எங்கள் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். மண்டப நிதியத்தை ஆரம்பியுங்கள். நிதி சேகரிக்கும் காலத்தைத் தீர்மானியுங்கள். மண்டபத்தை நிர்மாணியுங்கள். அறிஞர்களை அழையுங்கள். ஆய்வரங்குகளை நடத்துங்கள். எங்களிடமும் அப்துல் கலாமிற்கு நிகரான அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபியுங்கள். அதுபோதும் எங்கள் இனம் தழைத் தோங்குவதற்கு.

வலம்புரி
ஆசிரியர் தலையங்கம்


0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.