உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/03/11

பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!


 சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக கடும் சீற்றத்துடன் உள்ளது. இதனால் மின்காந்தத் தூண்டல் கதிர் வீச்சு, உயரழுத்த புரோட்டான்களின் அதிர்வலையால் ஏற்படும் கதிர்வீச்சு, சூரியனின் கரோனா என்னும் மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சு என அடுத்தடுத்து மூன்று வகையான பாதிப்புகள் பூமியை நோக்கி வரும் என்று தெரிகிறது.

தற்போது பூமியை தாக்கியுள்ள சூரியப் புயல் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகப் பெரியது என தெரிய வருகின்றது என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சூரியப் புயலால் பூமியின் வடதுருவம் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.