உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/03/12

கழுகு படத்தில் ஆசியாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் (?)


டிபார்மென்ட் ஸ்டோரில் கோல்கேட், பெப்சோடென்ட் பேஸ்ட் வகையறாக்களுக்கு நடுவில் அடுப்பு சாம்பலையும் அள்ளி வைத்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இது பற்றி கேட்கும்போதே கிறுகிறுத்துப் போகிறார்கள் பலர்.

ஜீவா, ஆர்யா போன்ற யூத் ஹீரோக்களை வைத்து ஒரு பிரமோஷன் பாடல் காட்சியை எடுத்திருக்கிறார்கள் கழுகு படத்திற்காக. இப்போதெல்லாம் இதுவும் ஒரு ட்ரெண்ட். மெரீனா படத்திற்காக இப்படி ஒரு பாடல் காட்சியில் விக்ரம் நடித்ததையெல்லாம் ரசிகர்கள் அறிவார்கள். 


ஹ்ம்ம்ம்... அதே ஸ்டைலில் அமைக்கப்பட்ட பாடல்தான் இதுவும். இதில்தான் ஜீவா, பரத் ஆர்யா போன்ற இளம் நடிகர்கள் தோன்றி நடித்துக் கொடுத்தார்களாம். இப்படத்தின் தயாரிப்பாளர் பட்டியல் சேகர், பரத் ஆர்யாவை வைத்து படம் தயாரித்தவர் என்பதால் மட்டுமல்ல, படத்தின் ஹீரோ கிருஷ்ணா இளம் நடிகர்கள் கூட்டத்தில் செல்லப் பிள்ளையாகவும் திகழ்வதுதான் இந்த பாடல் உருவாக இன்னொரு முக்கிய காரணம்.

இந்த பாடல் காட்சியில் கடைசி வரியில் ஒரு ஹீரோவை பாடி நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல, ஆசியா கண்டத்தின் ஒரே சூப்பர் ஸ்டார், மைக்கேல் ஜாக்சனின் பெவிக்கால் பிரண்ட் பவர்ஸ்டார் சீனிவாசன்தான். அழைத்தவுடனே எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஓடிவந்து நடித்துக் கொடுத்தாராம் இவர்.

ஒரு மார்க்கமாதான் இருக்கு எல்லாமே

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.